விடுமுறை நாளில் சோகம்... தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி!

 
பலி

அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த மென் பொறியாளர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி முத்தமாள் காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் பொன்சூர்யா (28). இவர் சென்னையில் மென்பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஹரிணி என்ற மனைவி உள்ளார். மூன்று நாட்கள் விடுமுறையில் தனது குடும்பத்துடன் தூத்துக்குடி வந்தார்

நீரில் மூழ்கி

இந்நிலையில் இவர் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கால்வாய் அணைக்கட்டு பகுதியில் குளிப்பதற்காக  சென்று இருந்தார். அங்கு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென ஆற்றில் மூழ்கினார். இது குறித்து தகவலின் பேரில் அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்சூர்யாவை தீவிரமாக தேடிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழந்த சோகம்.

தொடர்ந்து பொன்சூர்யா உடலை கைப்பற்றிய அம்பாசமுத்திரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இது இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?