சோகம்... 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு!

 
மாடியில் இருந்து

சென்னையில் சிவகங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் மருதாங்குடியை சேர்ந்தவர் ஜெபடெல்பன் (23). இவர் சென்னை சூளைமேடு அப்பாசாமி தெருவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடியே சேத்துப்பட்டு பகுதியில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். ஜெபடெல்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

மாடியில் இருந்து

இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு, இரவு விடுதிக்கு திரும்பிய ஜெபடெல்பன், பின்னர் 3வது மாடிக்கு சென்று மதுபோதையில் அங்குள்ள தண்ணீர் தொட்டிக்கு மேலே ஏறி நண்பர்களுடன் படுத்து தூங்கியதாக தெரிகிறது. 

மாடியில் இருந்து

இந்நிலையில் அதிகாலையில் கழிவறை செல்வதற்காக எழுந்த ஜெபடெல்பன், நிலைதடுமாறி 3வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சூளைமேடு போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?