சவ ஊர்வலத்தில் அதிர்ச்சி... பட்டாசு வெடித்ததில் துண்டான கைவிரல்கள்!

 
குமார்

திருவள்ளூர் மாவட்டம்  திருத்தணி அருகே திருவாலங்காடு ஒன்றியம், தும்பிக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது குமார். இவர்  தனியார் கட்டுமான பணிகளில் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில், நேற்று மாலை தும்பிக்குளம் கிராமத்தில் இறந்தவரின் சவ ஊர்வலத்தின்போது, குமார் கைகளில் வைத்தபடி பட்டாசுகளை வெடித்தபடி சென்றார்.  அப்போது குமாரின் கையில் இருந்த பட்டாசு எதிர்பாரதவிதமாக வெடித்தது. இதில் குமாரின் வலதுகையில் 2 விரல்கள் துண்டாகி ரத்தம் கொட்டத்தொடங்கியது.

ஆம்புலன்ஸ்

 படுகாயம் அடைந்த கட்டிட மேஸ்திரி குமாரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக  திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு  மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  குமாரின் வலது கையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web