திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து கோர விபத்து... சுப நிகழ்ச்சிக்கு செல்லும் போது விபரீதம்!

 
மைசூா்

கா்நாடக மாநிலம் மைசூா் பகுதியைச் சோ்ந்த 17 போ் கோவையில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வேனில் வந்துள்ளனர். சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப் பாதை வழியாக அவர்கள் வேன் சென்றுள்ளது. திம்பம் மலைப் பாதை 4 ஆவது கொண்டை ஊசி வளைவில், அந்த வேன் திரும்பும் போது திடீரென டயா் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மைசூா்

பயங்கர சத்தத்துடன் பேருந்து சாலையில் கவிழ்ந்து விழுந்தது. மேலும் வேனில் பயணம் செய்தவர்களும் கூச்சலிட்டதால் அப்பகுதியில் நின்ற மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதோடு, 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள், காயமடைந்தவா்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த விபத்தில் இதில், 9 போ் காயமடைந்தனா். இதில், படுகாயமடைந்த இரண்டு பேருக்கு சத்தியமங்கலத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

மைசூா்

வேன் கவிழ்ந்து விழுந்த குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். நல்வாய்ப்பாக பேருந்து சாலையில் கவிழ்ந்தது, சில அடி தூரம் இழுத்துச் சென்று கவிழ்ந்திருந்தால் சுமார் நூறு அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்திருக்கும்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web