நிலவில் ரயில்... ப்ளூ ப்ரிண்ட் தயார்... நாசா அதிரடி திட்டம்!

 
நிலவில் ரயில்

 நாசா விண்வெளி ஆய்வு மையம் நிலவில் ரயில் விட முயற்சித்து வருகிறது. இதனை சாத்தியமாக்கும் கூறுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சந்திரனில் முதல் ரயில் அமைப்பை உருவாக்குவதற்கான வரைபடத்தை உருவாக்கியுள்ளது. 
நிலவில் மனிதர்களுக்கான மனித காலனியை அமைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. நிலவில் உள்ள விண்வெளி மையத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முதலில்  ரோபோ போக்குவரத்து அமைப்பு தயாரிக்கப்படும் என நாசா கூறியுள்ளது. 2030க்குள்  இதற்காக நிலவில் ஒரு ரயில்வே தளத்தை உருவாக்க அமெரிக்கா இலக்கு நிர்ணயித்துள்ளது.  

நிலவில் ரயில்
நிலவில் ரயிலை ஓடச்செய்ய   பிரத்யேக டிராக் தயார் செய்யப்படும். நாசா இதற்கு Flexible Levitation on a Track (FLOAT) என்று பெயரிட்டுள்ளது. நாசாவின் வலைப்பதிவு ஒன்றில், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் ரோபோடிக்ஸ் பொறியாளர் எதெல் ஸ்க்லர், நிலவில் ரயில் திட்டம் பற்றிய தகவலை வழங்கியுள்ளனர்.
NASA ஆரம்ப வடிவமைப்பு குறித்த தகவல்களை வழங்கியுள்ளது. FLOAT அமைப்பில்,  3அடுக்கு படத்தடத்திற்கு மேலே காற்றில் பறக்கும் காந்த ரோபோக்களைக் கொண்டிருக்கும். இந்த பாதையில் கிராஃபைட் அடுக்கு இருக்கும். இது ரோபோக்களை டயாமேக்னடிக் லெவிடேஷன் மூலம் மிதக்கச் செய்யும். 2 வது அடுக்கு ஃப்ளெக்ஸ்-சர்க்யூட்டாக இருக்கும்.இது மின்காந்த உந்துதலை உருவாக்கும், இதனால் ரோபோக்கள் முன்னோக்கி செல்ல இயலும். சூரிய ஒளியில் இருந்து சக்தியை உருவாக்கும் சோலார் பேனலின் மெல்லிய அடுக்கு இருக்கும். FLOAT ரோபோக்களில் நகரும் பாகங்கள் எதுவும் இருக்காது. அவை பாதைக்கு மேலே பறக்கும். இதனால் சந்திர மேற்பரப்பு காரணமாக ரோபோக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது.  

நாசா
ரோபோ வண்டிகளின் வேகம் மணிக்கு 1.61 கிலோமீட்டராக இருக்கலாம்.  ஒரு நாளைக்கு சுமார் 100 டன் பொருட்களை ரோபோக்களால் எடுத்துச் செல்ல முடியும்.  நிலவின் தூசி நிறைந்த, கடுமையான சூழலில் குறைந்த தள தயாரிப்புடன் FLOAT தன்னாட்சி முறையில் செயல்படும் என நாசா கூறியது.
ஆர்ட்டெமிஸ் மிஷன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டு வருகிறது.  எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு நிலவில் நிரந்தர தளத்தை உருவாக்குவதே நாசாவின்  நோக்கம் எனக் கூறியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web