ரயில் ஓட்டுனர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை!!

 
ஸ்மார்ட் வாட்ச்

உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய தாக்கத்தில்  இருந்து இன்னும் விடுபடவே இல்லை. அடுத்தடுத்து ரயிலை கவிழ்க்க சதி, தண்டவாளத்தில் விரிசல்,  தடம் புரண்ட சரக்கு ரயில் என பல அசம்பாவிதங்கள் சூழத் தொடங்கியுள்ளன. ஜூன் 2ம் தேதி   இரவு 7 மணிக்கு    மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்,  ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தன.  

ஸ்மார்ட் வாட்ச்

அந்த சமயத்தில் அதே தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் ரயில் விபத்துக்களை தடுக்க  பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

ஸ்மார்ட் வாட்ச்


 தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தில் பணியின்போது ரயில் என்ஜின் ஓட்டுநர்கள் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.  ரயில் ஓட்டுனர்கள்  'ஸ்மார்ட் வாட்ச்' அணிந்து பணிபுரிகிற  போது கவனக்குறைவு ஏற்படலாம். ரயில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது   கவன சிதறல் ஏற்படலாம்.  அதனால் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு சென்னை கோட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி படிப்படியாக அடுத்தடுத்து அனைத்து கோட்டங்களிலும்  நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web