சென்னையில் ரயில் கவிழ்ந்து பெரும் விபத்து... வந்தே பாரத் உட்பட ரயில் சேவைகள் பாதிப்பு!

 
ரயில் விபத்து

சென்னை ஆவடி அருகே மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் இருந்தது. இந்த விபத்தினால் வந்தே பாரத் உட்பட  பல முக்கிய ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னையில் அண்ணனூர் பணிமலையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த புறநகர் மின்சார ரயில் தரம் புரண்டு விபத்துக்குள்ளானது. மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த வழிதடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் உட்பட முக்கிய ரயில்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், அண்ணனூரில் ரயில்வே பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் ரயில்கள் சரி செய்யப்பட்டு பின்னர் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் இன்று காலை கொண்டுவரப்பட்டது. அப்போது தண்டவாளத்தை ரயில் கடக்க முயன்ற போது 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் வேலூர், அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. வந்தே பாரத் ரயிலின் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். தகவல் அறிந்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில் நிற்காமல் சிக்னலை கடந்து சென்றதால் பெட்டிகள் தரம் புரண்டது தெரிய வந்தது. மேலும் பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்ததா அல்லது ஓட்டுநரின் கவன குறைவாக விபத்து நடந்ததா? என்று ரயில்வே துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web