ரயில் பயணிகளே உஷார்.. காபி வாங்கி கொடுத்து கைவரிசை.. இளம்பெண் அதிரடியாக கைது!

 
பூமிகா

கடந்த ஜூன் 12ம் தேதி தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டியில் தன்வந்திரி என்ற பெண் பயணம் செய்தார். அப்போது அவர் அருகில் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார்.ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்ததும், அந்த இளம் பெண் தன்வந்திரியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் டீ குடிக்கப் போவதாகவும், சர்க்கரை குறைவாக உள்ள டீ வாங்கப் போவதாகவும், உங்களுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டுள்ளார். அதற்கு தன்வந்திரி காபி வேண்டும் என கேட்டுள்ளார்.

உடனே அந்த இளம்பெண் வாங்கி வந்த காபியை குடித்து விட்டு தன்வந்திரி மயங்கி விழுந்து எழுந்து பார்த்தபோது மடிக்கணினி, கைப்பை மற்றும் பக்கத்தில் இருந்த இளம்பெண் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அவர் சென்னை எழும்பூர் ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 17ம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்ட மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த கண்ணகி என்ற பெண்ணுக்கும்,  இளம்பெண் காபி வாங்கி கொடுத்து தன்னிடம் இருந்த தங்க செயின், கவரிங் நகைகளை பறித்துச் சென்றதாக புகார் அளித்தார். இந்த இரண்டு வழக்குகளும் ஒரே மாதிரியாக இருப்பதைப் பார்த்த எழும்பூர் ரயில்வே போலீஸார், சம்பவம் நடந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு சம்பவங்கள் நடந்த இரு ரயில் பெட்டிகளில் இருந்தும் ஒரே இளம் பெண் இறங்கியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இளம் நடிகர் கைது

இதையடுத்து அந்த பயணியின் பிஎன்ஆர் எண் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த பூமிகா (23) என்பது தெரியவந்தது. பின்னர், சிறப்புப் படை போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியபோது, ​​ரயிலில் பயணம் செய்த இரு பெண்களும் தவறவிட்ட பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்துள்ளனர். அதை கைப்பற்றிய போலீசார் பூமிகாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web