பயணிகள் கவனத்துக்கு... இன்று இந்த வழித்தடங்களில் ரயில் சேவை பகுதியாக ரத்து!

 
ரயில் கூட்டம் வெளியூர் செண்ட்ரல்

தமிழகத்தில் பல ரயில் தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் ரயில் போக்குவரத்து பகுதியாகவோ, முழுமையாகவோ ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி அரக்கோணம் - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மேலப்பாக்கம் மற்றும் மகேந்திரவாடி ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

 ரயில்

அதனால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரயில்வே கோட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் கோவை- சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று  காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 ரயில்

அதே போல மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து  பிற்பகல்  2.35 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து இருந்து புறப்பட்டு கோவை ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web