பயணிகள் கனிவான கவனத்திற்கு... இந்த வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து!

 
 சிறப்பு ரயில்


 
திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து  விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்

விழுப்புரத்தில் இருந்து காலை 5:25 மணிக்கும், புதுச்சேரியில் இருந்து காலை 8:05 மணிக்கும் புறப்படும் விழுப்புரம்- புதுச்சேரி பாசஞ்சர் ரயில்கள் (எண் 66063 மற்றும் 66064) வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும் தாம்பரம் விழுப்புரம் பாசஞ்சர் ரயில் (எண் 66045) வரும் 12 மற்றும் 15ம் தேதிகளில் முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்.

ஜனவரியில் புதிய வழித்தடத்தில் மின்சார ரயில்!! ரயில் பயணிகள் உற்சாகம்!!
அதேபோன்று விழுப்புரத்தில் இருந்து பகல் 2:40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (எண் 66046) வரும் 12 மற்றும் 15ம் தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து பகல் 2:55 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
விழுப்புரத்தில் இருந்து பகல் 2:35 மணிக்கு புறப்படவேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண் 66019), ஜூலை 12 மற்றும் 15ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே, திருச்சி கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?