நாளை திருச்சி - தஞ்சாவூர் - திருவாரூர் இந்த ரயில் சேவையில் மாற்றம்!

 
ரயில்

பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் திருவாரூா் - கீழ்வேளூா் இடையேயான பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது  நாளை ஜூன் 30 ம் தேதி காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

ரயில் தண்டவாளம்

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது நாளை ஜூன் 30 ம் தேதி திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயக்கப்படும்  மேலும், திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்படும்.

தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் சேவைகள்! தெற்கு ரயில்வே!

காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயில் நாளை ஜூன் 30 ம் தேதி தேவைப்படும் இடங்களில் 30 நிமிடங்கள் நின்று தாமதமாகப் புறப்படும்.  மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில்  ஜூலை 2 ம் தேதி மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களைத் தவிா்த்து, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது