உடனே முந்துங்க... இன்று ஆயுத பூஜை விடுமுறை நாட்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

 
ரயில் முன்பதிவு

 உடனே முந்துங்க... இன்னும் முழுவதுமாக டிக்கெட் முடியவில்லை. இந்த வருடம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் உங்களுடைய பயணத்தை இப்போதே திட்டமிட்டுக்கோங்க. இன்று ஜூன் 11ம் தேதி ஆயுதபூஜை விடுமுறை நாட்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

ரயில்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதற்காக ரயில்முன்பதிவு செய்வது வழக்கம். பண்டிகைக் காலங்களில் ரயில்களில் கூட்டம் அலைமோதும் கூட்டத்தைத் தவிர்க்க 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. இதற்காக, ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வார்கள்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..
அந்த வகையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11-ம் தேதி வெள்ளிக்கிழமையும், அதற்கு மறுநாள் 12-ம் தேதி சனிக்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறை தொடர்ச்சியாக வருவதால், பொதுமக்கள் பயணங்கள் மேற்கொள்ள திட்டமிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவுகளை முன்கூட்டியே மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.
அதன்படி, ஆயுத பூஜை விடுமுறைக்காக, அக்.9-ம் தேதி (புதன்கிழமை) ஊருக்குப் புறப்பட்டுச் செல்வோர், செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) முன்பதிவுகளை மேற்கொள்ளலாம். அக்.10-ம் தேதி வியாழக்கிழமை ஊருக்குப் புறப்பட்டுச் செல்வோர், வரும் 12-ம் தேதி முன்பதிவுகளை மேற்கொள்ளலாம். ஆயுத பூஜை நாளான அக்.11-ம் தேதி ஊருக்கு செல்வோர், வரும் 13-ம் தேதி முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web