ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை தென்மாவட்டங்களுக்கு செல்லும் இந்த ரயில்கள் ரத்து... பகுதியாக ரத்து!
செங்கோட்டையிலிருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில் வண்டி எண் 20684 ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையம் வரை செல்லாது. விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதே போன்று ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இயங்கும் தாம்பரம் - செங்கோட்டை வரை செல்லும் ரயில் எண் 20683 வழக்கமான நேரத்தில் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும். ஆகஸ்ட் 15, 16 ,17 ஆகிய தேதிகளில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும்
ஆகஸ்ட் 14, 15, 16 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் சென்னை ரயில் விழுப்புரம் வரை மட்டுமே செல்லும்

ஆகஸ்ட் 17ம் தேதியன்று செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் வழியாக எழும்பூர் செல்லும்.ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை திருச்சியில் இருந்து அகமதாபாத் செல்லும் ரயில் எண் 09419 விழுப்புரத்தில் இருந்து சென்னை மார்க்கமாக அகமதாபாத் செல்லாமல் திருவண்ணாமலை, காட்பாடி, திருத்தணி ரேணிகுண்டா வழியாக அகமதாபாத் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்பவர்கள் இந்த ரயிலைத் தவிர்த்து விடலாம்.
ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை செங்கோட்டை யிலிருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு வரையே செல்லும். தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூருக்கு செல்லாது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
