கடலூர் ரயில் விபத்து... ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் !

 
 சிறப்பு ரயில்


கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் ரயில்மீது மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 மாணவர், 1 மாணவி உட்பட மூவர் பலியாகினர்.

கடலூர்
ரயில்வே கேட்டைக் கடக்க முயற்சித்த  பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாகன ஓட்டுநர், 3 பள்ளி மாணவர்கள் கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் சேவைகள்! தெற்கு ரயில்வே!


இந்நிலையில், விபத்து பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06190) சிதம்பரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 3 மணிநேரத்துக்கு மேல் தாமதமாகியுள்ளது. அதேபோல், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்துக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?