திருநங்கை மாணவி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை!

 
நிவேதா

இன்று தமிழகம் முழுவதும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.  இதில் வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் படித்த  திருநங்கை மாணவி நிவேதா  283 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளியின்  தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சக மாணவிகள்  திருநங்கைகள்  வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து இவர்  தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.  அதில்  திருநங்கையான நான் 12ம் வகுப்பு  மாணவி நிவேதா தேர்ச்சி பெற்றுள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது. என் வெற்றிக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தான் காரணம்.  நான் நீட் தேர்வு எழுதியுள்ளேன். கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறினார்.  

தேர்வு தாள்கள் திருத்தும் பணி
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வருபவர்  நிவேதா. இவர் 2015ல்  திருநங்கைகளுடன் இணைந்து இருக்கிறார். தமிழகம் முழுவதும் 4,13000   மாணவிகள்,  3,58,000 மாணவர்கள்,  ஒரு திருநங்கை உட்பட 7,72,000 பேர் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர்.

நிவேதா

அதன்படி  தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதிய ஒரே திருநங்கை  நிவேதா தற்போது வெற்றி பெற்று இருப்பது மற்ற திருநங்கைகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய கனவு மருத்துவராக வேண்டும் என்பது.  நேற்று நடைபெற்ற நீட் தேர்வையும் நிவேதா எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web