அதிர்ச்சி வீடியோ... திருநங்கை சாலையில் நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி படுகொலை!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியில் வசித்து வந்தவர் ஸ்டீவன் ஆண்டர்சன் (64). இவர், தபால் எடுப்பதற்காக சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த கார் அவர் மீது திடீரென மோதியது. பின்னர் அதே கார் பின்னோக்கி வந்து மீண்டும் அவர் மீது ஏறி இறங்கியது. இவ்வாறு இரண்டு முறை காரை ஏற்றிய நபர், காரில் இருந்து இறங்கி வந்து கத்தியால் சரமாரியாக குத்தினார்.
NEW: Man killed by transgender driver who plowed into him, backed over him and stabbed him 9 times before kissing him and prancing over his body.
— Collin Rugg (@CollinRugg) May 11, 2024
Absolutely horrific.
20-year-old suspect Karon Fisher is a man according to court papers.
After trying to flee the scene in a car,… pic.twitter.com/XuG8KcPIZw
இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டீவன் ஆண்டர்சன் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த கொலை அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 3-ம் தேதி நிகழ்ந்த இந்த படுகொலை தொடர்பான சிசிடிவி வீடியோ கிளிப் வலைத்தளங்களில் பரவி வருகிறது.இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஸ்டீவன் மீது காரை ஏற்றி கொலை செய்தது காரோன் பிஷ்ஷர் (20) என்ற திருநங்கை என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!