மேலாடையின்றி அமெரிக்க அதிபர் முன்பு தோன்றிய திருநங்கை.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!

 
அமெரிக்கா

அமெரிக்க அதிபர் பைடனுக்கு இந்த சங்கடம் நேர்ந்திருக்க வேண்டாம். வெள்ளை மாளிகையில் பிரைட் மாத கொண்டாட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் திருநங்கை ஒருவர், திடீரென தன்னுடைய மேலாடையின்றி அதிபர் ஜோ பைடன் முன்பு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.  

ஒவ்வொரு வருஷமும் ஜூன் மாதம் அமெரிக்காவில் பிரைட் மாதமாக கொண்டாடப்படுகிறது. ஜூன் மாதம் முழுவதுமே அமெரிக்காவில் பேரணிகள், நிகழ்ச்சிகள் என்று திருவிழா களைகட்டும். அப்படி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பிரைட் மாத கொண்டாட்டம் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

USA

இந்நிலையில், ரோஸ் மோண்டோயா எனும் திருநங்கை பிரைட் மாத கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, தனது மேலாடையின்றி போஸ் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனை சந்தித்ததையும், பின்னர் அதிபர் ஜோ பைடனுடன் கைகுலுக்குவதையும் பார்க்க முடிகிறது. அந்த திருநங்கை வெள்ளை மாளிகையின் முன் தொடர்ச்சியாக அரை நிர்வாண போஸ் கொடுப்பதையும் அந்த வீடியோவில் காணலாம்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் செவ்வாயன்று, நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், டிரான்ஸ் வக்கீல் ரோஸ் மோன்டோயா உட்பட, ‘தகாத’ நடத்தையில் ஈடுபட்டுள்ளனர், இது தங்கள் குடும்பங்களைக் கொண்டாட வந்த நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது என கூறி உள்ளார்.

I had the honor of attending @WhiteHouse Pride, the largest one in history where the pride flag flew for the first time. This is trans joy. We’re here at the white house unapologetically trans, queer, and brown 💕#foryourpride #pridemonth #whitehouse #potus #flotus #dcpride… pic.twitter.com/vpvgYPzH0N

— Rose Montoya 👑🌹 (@therosemontoya) June 12, 2023


கடந்த 10-ம் தேதி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பிரைட் மாத கொண்டாட்டத்தை அதிபர் ஜோ பைடன் நடத்தினார். இந்த நிகழ்வு ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஒற்றுமையைக் காட்டுவதாக இருந்தது, அவர்கள் பழமைவாத மாநில சட்டமன்றங்களில் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று வெள்ளை மாளிகை குற்றம்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web