திருநங்கைகள் தீக்குளிக்க முயற்சி... கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!

 
திருநங்கை

 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசித்து வரும்  திருநங்கை இளவஞ்சி. இவர், தளவாய்புரம் அருகே உள்ள ரங்கநாதபுரம் பாறைக்கோவில் தெருவில் சொந்தவீட்டில் வசித்து வருகிறார். இவருடன் அந்த வீட்டில்   9 திருநங்கைகள் வசிக்கின்றனர்.  இளவஞ்சி தன்னுடன் வசித்து வரும் மற்ற திருநங்கைகளுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

திருநங்கை

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  வாட்டர்பாட்டிலில் இருந்த  பெட்ரோலை ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த  போலீஸார் திருநங்கைகள் மீது தண்ணீர் ஊற்றி  தடுத்துநிறுத்தினர். அப்போது, 'சொந்த வீட்டை விட்டு விரட்ட நினைக்கும் அ.தி.மு.க. கவுன்சிலரின் கணவரை தட்டிக்கேட்பதற்கு போலீஸூம் தயாராக இல்லை, இந்த சமூகமும் தயாராக இல்லை. பின்பு நாங்கள் எதற்கு உயிர் வாழ வேண்டும்' என அழுது குமுறினர்.   மார்ச் 15ம் தேதி  ரூ.17 லட்சம் கொடுத்து அந்த வீட்டை நாங்கள் விலைக்கு வாங்கி குடியேறினோம். என்னோடு சேர்த்து மொத்தம் 9 திருநங்கைகள் அந்த வீட்டில் வசித்து வருகிறோம்.  

திருநங்கை

எங்களின்  பிழைப்புக்காக ஆடு, மாடுகளை வளர்க்கிறோம். இதை  கட்டுவதற்காக எங்கள் வீட்டுவாசல் முன்பு உள்ள வழிபாதையோடு சேர்ந்த அரசு புறம்போக்கு நிலத்தில் கூரை வேய்ந்துள்ளோம்.  எங்கள் வீட்டருகே உள்ள பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிடுவதற்காக ஒரு குறிப்பிட்ட சமுகத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். அதில் அப்பகுதி கவுன்சிலர் குமரேஸ்வரியின் கணவர் ஆறுமுகசாமிக்கு   அந்தப்பகுதியில் வீடுவாங்கி குடியேறியது  பிடிக்கவில்லை. எனவே, அவர் உள்பட அவரின் ஆதரவாளர்கள் எங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் ஆறுமுகசாமியோடு வீட்டுக்கு வந்தவர்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் ஆடு, மாடுகளுக்காக வேயப்பட்டிருக்கும் கூரையை அகற்றச் சொல்லி மிரட்டினர்.  

அத்துடன்  எங்களை தகாத வார்த்தைகளால் பேசி அடிக்க வந்தனர்.  இரவில் வீட்டின் முன்பு 20க்கும் மேற்பட்ட ஆண்களோடு வந்து நின்று பயமுறுத்தியதோடு, 'வீட்டு பத்திரத்தை எடுத்துக்கொடு அதிலிருக்கும் எல்லைப்படி பார்த்து விட்டு நாங்களே இடித்துக்கொள்கிறோம்' என்கிறார்கள்.  இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்தோம். ஆனால் எங்களது புகாரை போலீஸ் விசாரிக்கவே இல்லை. இதன் பிறகு தான் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முடிவு செய்தோம் எனக் கூறினர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web