திருடுவதற்காகவே விமானத்தில் பயணம்.. 200 முறை பயணித்த பலே கில்லாடி அதிரடியாக கைது!

 
விமானம் விமான நிலையம்

விமானங்களில் பயணம் செய்யும் போது சக பயணிகளின் உடைமைகளில் இருந்து நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை திருடிய ராஜேஷ் கபூர் (10) என்ற நபரை கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர். இவர் கடந்த ஆண்டில் குறைந்தது 200  விமானங்களில் திருட்டுக்காக மட்டுமே சென்றுள்ளார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் காவல்துறை துணை ஆணையர் உஷா ரங்க்னானி கூறியதாவது:
விமான பயணிகளை குறிவைத்து  திருடிய ராஜேஷ் கபூரை கைது செய்துள்ளோம். திருடிய நகைகளை அப்பகுதியில் மறைத்து வைத்திருந்தார். இந்த நகைகளை கரோல் பாக் பகுதியில் பதுங்கியிருந்த ஷரத் ஜெயின் (16) என்பவருக்கு விற்க திட்டமிட்டார். அவரையும் கைது செய்துள்ளோம்.

கடந்த 3 மாதங்களில் விமானப் பயணிகளிடம் இருந்து பெறுமதியான பொருட்கள் திருடப்படுவது தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்ற பயணி ஒருவர் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகளை இழந்தார். பிப்ரவரி 2ம் தேதி அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு சென்ற பயணி ஒருவர் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை இழந்தார். விசாரணையில், டெல்லி மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

கைது

மேலும், விமான பயணிகள் பட்டியலையும் ஆய்வு செய்தனர். திருட்டு சம்பவங்கள் நடந்த இரு விமானங்களிலும் ராஜேஷ் கபூர் பயணம் செய்தது தெரியவந்தது. அதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜேஷ் கபூர் பல்வேறு விமானங்களில் பயணம் செய்து தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. திருட்டில் கிடைத்த பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது 11 வழக்குகள் உள்ளன. அவர் விமானப் பயணத்தில்  முதியவ்ர்களை குறிவைத்துள்ளார்," என்று காவல் அதிகாரி கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web