ஆகஸ்ட் 17ம் தேதி மரங்களின் மாநாடு ... சீமான் அதிரடி அறிவிப்பு..!

 
சீமான்

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகஸ்டு 17ம் தேதி திருச்சியில் “மரங்களின் மாநாடு” நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்த மாநாட்டின் மூலம், “மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம்” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி, மரங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்த இருப்பதாக கூறியுள்ளார். 

“மரம் மண்ணின் வரம், வளர்ப்பதே மனித அறம்” என குறிப்பிட்டுள்ளார். இந்த மாநாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னதாக, சீமான் மதுரையில் ஜூலை 10ம் தேதி அன்று “மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை” என்ற தலைப்பில் ஆடு-மாடுகள் மாநாடு நடத்தியிருந்தார்.

இதில், கால்நடைகளின் மேய்ச்சல் உரிமை, இயற்கை விவசாயம், மற்றும் நவீன வேளாண்மையால் உள்ளூர் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியிருந்தார். இப்பொது, ஆடு-மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து, மரங்களின் மாநாடு சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு மேலும் ஒரு படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக தான் சங்கி: மேடையில் செருப்பை கழற்றி விமர்சித்த சீமான்!!

ஆனால், இந்த மாநாடு மீதான சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக சீமானின் இத்தகைய மாநாடுகள் சில சமூகங்களை மையப்படுத்துவதாகவும், சாதி அடிப்படையில் நோக்கம் கொண்டவையாகவும் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு குற்றம்சாட்டியிருந்தனர். இருப்பினும், சீமான் இத்தகைய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இயற்கை மற்றும் பாரம்பரிய வாழ்வியலைப் பாதுகாப்பதே தனது நோக்கம் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?