நெகிழ்ச்சி... உயிரிழந்த மாட்டிற்கு நினைவஞ்சலி போஸ்டர் !

 
காளை மாடு


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரில் வசித்து வருபவர் கேசவன்.  இவர் உழவர் சந்தை பகுதியில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடி வாரச்சந்தையில் ரூ8000 க்கு காளை மாட்டை விலைக்கு வாங்கி உள்ளார். இந்த காளை மாட்டிற்கு கணேசன் என பெயர் வைத்து   வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் 2021 ஜூலை 11 ம் தேதி உடல் நலக்குறைபாட்டால் திடீரென உயிரிழந்தது.

காளை மாடு

உயிரிழந்த மாட்டை தனது சொந்த இடத்தில் அடக்கம் செய்துவிட்டார். மாடு மேல் பாசம் அதிகம்  கொண்ட  காரணத்தால் தனது கோழி கறிக்கடைக்கு கணேசன் என பெயர் மாற்றம் செய்துள்ளார். தற்போது மாடு உயிரிழந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்  மாட்டின் புகைப்படத்துடன் 3ம் ஆண்டு நினைவஞ்சலி சுவரொட்டி ஒட்டியுள்ளார்.

காளை மாடு

 பரமக்குடி  முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி தனது கடையில் மாட்டின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். வீட்டில் வளர்த்த மாடு உயிரிழந்ததை நினைவு தினம்  அனுசரிக்கும் வகையில் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தில்  பரமக்குடி நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web