இளம் நடிகைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..!!. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 
அனிகா

படத்தின் பப்ளிசிட்டிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாய் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.நடிகருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்வது, நடிகரைக் கல்யாணம் செய்து கொண்டது போல திருமண கோலத்தில் புகைப்படத்தைப் பதிவிடுவது, கர்ப்பமாக இருக்கிறேன் என்று திருமணமாகாத நடிகை ட்விட்டரில் பதிவிடுவது என படத்தின் பப்ளிசிட்டிக்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும்.... ஏன் நடிக, நடிகைகள் என சினிமாக்காரர்கள் செய்கிற அலப்பறைகளுக்கு அளவேயில்லை.

அனிகா
அப்படி, அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா, அதன் பின்னர், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.கொஞ்சம் வளர்ந்ததும் அனிகா செய்த அரைகுறை ஆடைகளிலான போட்டோஷூட்கள் வைரலாகி வந்தது. சமீபத்தில் அனிகா நடிப்பில் ஓ மை டார்லிங் படம் வெளியானது. 

அனிகா
இந்நிலையில், நந்தினி என்கிற பெயரில் நடிகை அனிகாவிற்கு கண்ணீர் அஞ்சலி வடிவமைக்கப்பட்டு, அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
இந்த போஸ்டர் எந்த படத்திற்காக வடிவமைக்கப்பட்ட காட்சி என தெரியவில்லை. ஆனால், அதற்குள் இணையதளங்களில் இந்த போஸ்டரை வைரலாக்கி, ரசிகர்கள் அதிர்ச்சியடையந்துள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. சினிமாவுக்கு பண்ற பப்ளிசிட்டியில செலுத்துற கவனத்துல கொஞ்சம் கதையிலும் செலுத்துங்கப்பா... படம் தேறும் கிண்டலடித்தப்படி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web