திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் திறப்பு விழாவிற்கு தயார்... மகிழ்ச்சியில் மக்கள்!

 
அரிஸ்ட்டோ திருச்சி மேம்பாலம்

ஆண் பாவம் படத்தில் வி.கே.ராமசாமி தியேட்டர் ஒன்றை நடத்தி கொண்டிருப்பார். வெள்ளியன்று புதிய படம் திரையிடுவதற்காக திட்டமிட்டதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் பொட்டி வரல... பொட்டி வரல... எனும் அறிவிப்பு லவுட் ஸ்பீக்கரில் வெளியாகும். ரசிகர்கள் சோர்ந்து போவார்கள். அதன்பிறகு சற்று நேரத்தில் பொட்டி வந்துடுச்சு... பொட்டி வந்துடுச்சி... என அறிவிப்பு வர ஆனந்தத்தில் ஆர்பாரிப்பார்கள் ரசிகர்கள். அப்படி ஒரு மனநிலையில் இப்பொழுது இருக்கிறார்கள் திருச்சி வாழ் மக்கள்.

இருக்காத பின்னே... அரிஸ்டோ ரவுண்டானாவை திறக்கப் போகிறார்கள் என்றால் திருச்சி மாநகரில் அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இந்த பாலம் அமைக்கும் பணிக்காக ரூ.81 கோடி திட்ட மதிப்பில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.

முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது.

நேரு

ஆனால் மறுபுறம் சென்னை-மதுரை செல்லும் பைபாஸ் சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாகவே தொங்கிக் கொண்டு இருந்தது. இதில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இந்த பாலம் முழுமை அடையாமல் 8 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் பாலத்தின் பாதி வேலையை முடித்த அதிமுகவின் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் பல்வேறு வகையிலும் முட்டி மோதி சீ.. சீ... இந்தப்பழம் புளிக்கும் என சட்டமன்றத்தை நோக்கி நடையை கட்ட கிளம்பி பாலம் கட்டும் பணியில் தோல்வியை தழுவியது போல சட்டசபை தேர்தலிலும் தோல்வியை தழுவினார்.

அடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினரான திருநாவுக்கரசர் இதை கையில் எடுக்க, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் பாதியில் விடுபட்ட பாலப் பணிகளுக்கான இடத்தை கொடுக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. அதன்பின் கடந்த ஆண்டு மே மாதம் மீண்டும் பூமி பூஜையுடன் மீதமிருந்த பாலப்பணிகள் தொடங்கியது. 

இதற்கு தனியாக ரூ.3 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த பாலத்தில் இறுதி கட்ட பணிகளாக மின் விளக்கு பொருத்தும் பணி, வழிகாட்டி பலகை பொருத்தும் பணிகள், பாலத்தின் வழியே செல்லும் பாதையில் வெள்ளை நிற கோடுகள் போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற 29ம்தேதி பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றும், இதனை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரங்கராஜன்

1998 முதல் 2000 வரை பாஜக சார்பாக போட்டியிட்டு வென்ற அரங்கராஜன் குமாரமங்கலம் கிட்டத்தட்ட ஐந்து மேம்பாலங்களை கட்டியதோடு திருச்சியை அழகு நகரமாக மாற்றிக் காட்டினார் ஆனால் இவர்கள் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு, அதுவும் மிக முக்கிய பாலத்தைக் கட்ட இத்தனை ஆண்டுகளா? ம்ம்ம்ம்... யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே என்பது போல நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் பாலம் முன்னே வருகிறது என மக்கள் ஒருபுறம் கிசுகிசுத்தாலும், பாலம் திறப்பு விழா கண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web