திருச்சி ஆர்.டிஓ., மனைவியுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!

திருச்சியில் ஆர்.டி.ஓ., வாக பணிபுரிந்து வருபவர், தனது மனைவியுடன் சேர்ந்து நாமக்கல் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் மணற்கொள்ளை குறித்து துடிப்புடன் விசாரணை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டத்தில் ஆர்.டி.ஓ. ஆக பணிபுரிந்து வந்தவர் சுப்பிரமணி (40). இவரது மனைவி பிரமிளா. இவர் ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் சுப்பிரமணி மற்றும் பிரமிளா இருவரும் இன்று அதிகாலை நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி பகுதியில் ரயில் முன்பு விழுந்து தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தம்பதியரின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!