திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்!
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரும், திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலருமான துலாலா சர்க்கார் என்ற பாப்லா ஆயுதம் ஏந்திய நான்கு நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
ஜல்ஜாலியா மோர் மீது பைக்கில் வந்த இருவர் சர்க்காரை பலமுறை சுட்டதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். இதில், 3 தோட்டாக்கள் அவரைத் தாக்கின. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். எனக்கு மிகவும் நெருக்கமானவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆரம்பத்தில் இருந்து கடுமையாக உழைத்தவருமான சர்க்கார் என்ற கவுன்சிலர் கொல்லப்பட்டது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!