ஆட்டோ ரிக்ஷா மீது மோதிய லாரி.. 3 பேர் பலி.. தவறான பாதையில் வந்த ஓட்டுநர் எஸ்கேப்!
பீகார் மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள வாட்கி கிராமத்திற்கு அருகே புதன்கிழமை கோர விபத்து நடந்தது. சபில்பூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பிரகதி பெட்ரோல் பம்ப் அருகே சாலையின் தவறான பாதையில் வேகமாக வந்த ஒரு லாரி, பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ரிக்ஷா மீது மோதியது. இந்த விபத்தில், ராஜ்கிரிலிருந்து பர்னௌசாவுக்குச் சென்று கொண்டிருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இறந்தவர்கள் காஞ்சன் தேவி, திலீப் குமார் மற்றும் பிந்தி பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பிரியங்கா தேவி, ரிங்கி தேவி மற்றும் ரவி ரஞ்சன் குமார் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ராஜ்கிர் துணைப்பிரிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை மோசமாக இருந்ததால், அவர்கள் பவபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களின் நிலை சீராக உள்ளது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். "சபில்பூர் காவல் நிலையத்திற்கு அருகே தவறான பாதையில் லாரி ஓட்டியதற்காகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கு பிறகு லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று சபிலாபூர் காவல் நிலைய எஸ்.எச்.ஓ சஞ்சய் குமார் தெரிவித்தார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!