பைக் மீது லாரி மோதி விபத்து... இளைஞர் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் பைபாஸ் சாலையில் பைக் மீது லாரி மோதிய விபத்திற்குள்ளானதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி, மணி நகரைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி மகன் குணசேகர் (23), இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஒரு டிப்பர் லாரி இவரது பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த விபத்து குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரியை ஓட்டி வந்த நெல்லை கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் ஆறுமுகம் (23) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!