லாரி மோதி கோர விபத்து... 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி!
ராஜஸ்தான் மாநிலத்தில் காது ஷியாம் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு பக்தர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நடந்த சாலை விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பக்தர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களின் பிக்அப் வேன் ஒரு லாரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவத்திற்குப் பிறகு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்த விவரங்களை அளித்த தௌசா மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார், "பாபி அருகே நடந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் பிக்-அப் லாரிக்கும் டிரெய்லர் லாரிக்கும் இடையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது" என விபத்தை பார்த்தவர் விளக்கமளித்தார். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. காது ஷியாம் கோயிலில் வழிபாடு செய்த பிறகு 22 பேர் அடங்கிய குழுவானது தங்களது வாகனத்தில் ஏறி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான எடாவிற்கு பயணம் செய்தனர். மனோஹர்பூர் நெடுஞ்சாலையின் சர்வீஸ் பாதையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பிக்அப் வாகனம் மோதியதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதா? மது ஏதேனும் அருந்தி இருந்தாரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் தௌசாவில் நடந்த சாலை விபத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இது குறித்து வெளியிட்ட இரங்கல் செய்தியில் “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கலும், படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.”
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
