லாரி மோதி விபத்து... பேரனை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட பெண்!

 
பேரனைக்

லாரி மோதி விபத்திற்குள்ளானதில், மடியில் வைத்திருந்த பேரனை ரோட்டின் ஓரமாக தூக்கி வீசி, பேரனின் உயிரைக் காப்பாற்றிவிட்டு, லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (45). இவருடைய மனைவி மகேஸ்வரி (42). இவர்களுடைய பேரன் சிவ நித்திஷ் (3).

இந்நிலையில் நேற்று இவர்கள் தங்களது பேரன் சிவ நித்திஷை அழைத்துக் கொண்டு பைக்கில் கீழக்குயில்குடி வரை சென்று விட்டு, நான்கு வழிச்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

விபத்து

இவர்களது பைக் மொட்டமலை பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, பின்னால் வந்துக் கொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென பைக் மீது மோதியது. இதில், எப்படியும் விபத்தில் உயிரிழப்போம் என உணர்ந்து, சமயோசிதமாக சட்டென தன் மடியில் தூக்கி வைத்திருந்த பேரன் சிவ நித்திஷை சாலையோரத்தில் இருந்த புல் தரையில் மகேசுவரி வீசி உள்ளார். இந்த விபத்தில் பெரியசாமி தூக்கி வீசப்பட்டு ரோட்டின் ஓரம் படுகாயமடைந்த நிலையில் கிடந்தார். ஆனால் மகேஸ்வரி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து நேரிட்டதும், லாரியை நிறுத்தாமல், அங்கிருந்து வேகமாக ஓட்டுநர் கிளம்பி சென்று விட்டதால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று லேசான காயத்துடன் அழுதுக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

விபத்து குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேசுவரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, காயமடைந்த பெரியசாமியையும் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் லாரியுடன் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?