சரக்கு வாகன ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை.. வாடகைக்கு வாகனம் பார்ப்பது போல் நடித்து வெறிச்செயல்!

 
பிரபாகரன்

கோவை கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் செட்டிபாளையம் சாலையில் சரக்கு வாகன ஓட்டுநர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கோவை மாவட்டம் சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (32), சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று பிரபாகரனை அடையாளம் தெரியாத இருவர் சரக்கு வேன் வாடகைக்கு வேண்டும் என கூறி அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

கொலை

இதையடுத்து வடசித்தூர் செட்டிபாளையம் சாலையில் சரக்கு வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும் போது உடன் இருந்த அடையாளம் தெரியாத இருவர் திடீரென பிரபாகரனின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்நிலையில், சரக்கு வாகனம் நீண்ட நேரமாக நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால், அவ்வழியாக சென்ற சிலர், சந்தேகத்துக்கிடமாக வாகனத்தை பார்த்தபோது, ​​ஓட்டுனர் பலியானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும், லாரி டிரைவர் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web