மோடியை பார்த்து ட்ரம்ப் பயப்படுகிறார்... நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு!

 
ட்ரம்ப்
 

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற பிரச்சார நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு விதித்த வரியை குறைத்தது குறித்து பாராட்டிய அவர், “பிரதமர் மோடியைப் பார்த்து டிரம்ப் பயப்படுகிறார். அத்தகைய வலிமையான தலைவராக மோடி விளங்குகிறார்” என்று தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை குறைத்ததுதான் இந்த வரி குறைப்புக்கு காரணம் என்றும் கூறினார்.

பின்னர் திமுக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன், “கல்வியில் முன்னேற்றம் என ஸ்டாலின் கூறினாலும், இன்று பள்ளிகளில் மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலை உள்ளது. தேர்தல் வந்தால்தான் திமுகவினர் மக்கள் நலனை நினைக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் தருவோம் என கூறி ஆட்சிக்கு வந்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புதான் கொடுத்தார்கள்” என குற்றம் சாட்டினார். மேலும், திமுகவின் ஒரே நோக்கம் ‘மகனை முதலமைச்சராக்குவது’ என்பதாகவும் கிண்டலடித்தார்.

அத்துடன், தவெக தலைவர் விஜய்யை குறிப்பிடாமல் விமர்சித்த நயினார், “சிலர் தமிழ்நாட்டில் திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்கிறார்கள். கரூருக்கு வந்தவுடன் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடுகிறார்கள்; பிறகு செருப்பு ஈ வீசப்படுகிறது, விளக்கு அணைக்கப்படுகிறது, லத்தி சார்ஜ் நடக்கிறது” என்று கடுமையாக தாக்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக இணைந்திருந்தால் வெற்றி அதிகரித்திருக்கும் என்றும், இப்போது இணைந்துள்ளதால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். “யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்; திமுக ஒருபோதும் வரக்கூடாது” என கூறி உரையை முடித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!