ஒரே நாளில் 30,00,000 ஃபாலோயர்ஸ்... டிக்டாக்கில் புதிய கணக்கு தொடங்கிய ட்ரம்ப்!

 
ட்ரம்ப்

 அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். 77 வயதான டிரம்ப்  அமெரிக்க  குடியரசு கட்சி தலைவராக இருந்து வருகிறார்.  டிரம்ப் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில்  அதிபர் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதனை முன்னிட்டு அமெரிக்காவில்  தீவிர தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகிறார்.

டிக்டாக் டெலகிராம்
 இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்தநிலையில் சீன செயலியான டிக் டாக்கில் டிரம்ப் புதிய கணக்கு தொடங்கியுள்ளார்.  இதனையடுத்து டிரம்ப்பை ஒரே நாளில்  30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் அதிபராக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.

ட்ரம்ப்
தற்போது அவரே டிக் டாக்கில் இணைந்திருப்பந்து அமெரிக்காவில் பெரும் சர்ச்சைகளை  ஏற்படுத்தி உள்ளது. அவர் தேர்தல் பிரச்சார உத்திக்காக டிக் டாக்கில் இணைந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web