ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் “குட்டித் தூக்கம்” !

 
ட்ரம்ப்
 


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்தப் புகைப்படம் வெளிவந்தவுடன், நெட்டிசன்கள் “டிரம்ப் கூட்டத்தின் நடுவே தூங்கிவிட்டாரா?” எனக் கேலி செய்து, பல்வேறு மீம்களாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து, டிரம்ப் எதிர்ப்பாளர்கள் “அவரது உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளது, பணி நேரத்திலேயே சோர்வடைவது அதிருப்திகரமானது” என்று விமர்சனங்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள், “அவர் கண்களை சற்று மூடி சிந்தித்த தருணமே அது, தூக்கம் அல்ல” என விளக்கம் அளிக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை நடந்த மருந்து விலை குறைப்பு ஆலோசனை கூட்டத்தில்தான் இந்த காட்சி பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, டிரம்பின் உடல்நிலை குறித்து சமீப மாதங்களாகவே பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது கையில் காயம் ஏற்பட்ட புகைப்படம் பரவியபோது, இரத்த நாள பிரச்சினை குறித்து செய்திகளும் வெளியாகின. இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், டிரம்ப் “நாள்பட்ட சிரை குறைபாடு” (chronic venous insufficiency) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தது. தற்போது வெளியாகியுள்ள இந்த “குட்டித் தூக்க” புகைப்படம், டிரம்பின் உடல்நிலை மீதான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!