பரபரக்கும் அரசியல்... இன்று டிரம்ப் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை.!

 
ட்ரம்ப் ஜெலென்ஸ்கி


 
அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று வாஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த  உள்ளனர். இந்த சந்திப்பு உக்ரைன்-ரஷ்யா போர், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் ஐரோப்பிய ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.ஆகஸ்ட் 15 ம் தேதி  அலாஸ்காவில் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசியிருந்தார். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

ட்ரம்ப் உக்ரைன் புதின்

இன்றைய சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களான உர்சுலா வோன் டெர் லியென், பிரெட்ரிக் மெர்ஸ், கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரும் கலந்து கொள்ளலாம் எனத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.  உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், ரஷ்யாவின் நிபந்தனைகளான டோன்ஸ்க் பகுதியை ஒப்படைப்பது மற்றும் நேட்டோவில் உக்ரைன் இணையாமல் இருப்பது போன்றவை ஏற்க முடியாதவை என உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் புதின்
ட்ரம்ப், புதின் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே முத்தரப்பு சந்திப்பு நடத்தப்படுவதற்கான சாத்தியமும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே காரசார விவாதங்கள் நடைபெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?