ரஷ்யா 50 நாட்களுக்குள் போரை நிறுத்தலைன்னா 100% வரி தான்... ட்ரம்ப் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை !
அமெரிக்க அதிபர் டிரம்ப், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் சந்திப்பு வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த சந்திப்பில், உக்ரைனுடனான போரை 50 நாட்களுக்குள் நிறுத்தாவிட்டால் ரஷ்யாவுக்கு எதிராக 100 சதவீத ‘இரண்டாம் நிலை வரி’ விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமின்மை குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய டிரம்ப், உக்ரைனுக்கு ‘உயர்தர’ ஆயுதங்களை, நேட்டோ நாடுகளின் செலவில், அனுப்பி வைக்க இருப்பதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு, உக்ரைன்-ரஷ்யா போரில் டிரம்பின் அணுகுமுறையில் முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.

மேலும் ட்ரம்ப் “நாங்கள் ரஷ்யாவைப் பற்றி மிகவும் அதிருப்தி அடைகிறோம். 50 நாட்களுக்குள் ஒரு உடன்பாடு ஏற்படவில்லை என்றால், 100 சதவீத இரண்டாம் நிலை வரிகளை விதிப்போம்” என்று கூறினார். இந்த வரிகள், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளை குறிவைக்கும்.உதாரணமாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும், இது இந்தியாவின் வருவாயை பாதிக்கும் மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதை நோக்கமாகக் கொண்டது. “புடினுடன் நிறைய பேசுகிறேன், உரையாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கின்றன. ஆனால், அவர் பேச்சுக்கு பிறகு மிசைல்களை ஏவுகிறார். இது எதுவும் பயனில்லை” எனக் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி, உக்ரைனுக்கு வலிமையான ஆயுதங்களை, வானில் இருந்து தாக்குதலை தடுக்கும் பேட்ரியாட் குண்டுகள் உட்பட, அனுப்புவதாக டிரம்ப் உறுதியளித்தார். இதற்கு ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து போன்ற நேட்டோ நாடுகள் பணம் கொடுக்கும். “இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்கு மிகவும் தேவை,” எனக் கூறியுள்ளார். நேட்டோ தலைவர் ரூட்டே, “ரஷ்யா இந்த எச்சரிக்கையை சீரியசாக எடுக்க வேண்டும்” ரஷ்ய அதிபர் புடினுடன் பலமுறை பேசியதாகவும், ஒவ்வொரு முறையும் உடன்பாடு ஏற்பட்டாலும், புடின் உக்ரைனில் தாக்குதலை தொடருவதாகவும் கூறினார். “பேச்சுக்குப் பின் கீவ் நகரில் குண்டுகள் விழுகின்றன. இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும்,” என கூறினார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, டிரம்பின் ஆதரவுக்கு நன்றி கூறினார். டிரம்பின் தூதருடனான பேச்சு பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
