அதிர்ச்சி... டிரம்ப்பின் சகோதரி உயிரிழந்த சடலமாக மீட்பு... !!

 
டிரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த சகோதரி மேரியன். இவர்   நியூயார்க் மான்ஹாட்டனில் வசித்து வந்தார். இவர்  திங்கட் கிழமை காலை தனது வீட்டில், தனது படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்   நியூயார்க் நகர போலீஸார், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அவர்   உயிரிழந்த சடலமாக கிடந்துள்ளார். அவருக்கு வயது 86. இச்சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

டிரம்ப்

முதற்கட்ட விசாரணையின் படி  மேரியன் கார்டியக் அரெஸ்ட் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  எந்த அசம்பாவிதமும் நடந்ததற்கான தடயங்கள் ஏதுமில்லை எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேரியன்   1983ல்  நியு ஜெர்சியில் பெடரல் ஜட்ஜாக இருந்து,   2019ல்  ஓய்வு பெற்றவர். சகோதரியின் இறப்பு குறித்து டொனால்ட் டிரம்ப் இதுவரை எந்த அறிக்கையும், இரங்கலும் தெரிவிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.  

rip


மேரியன் 2020ல் தனது சகோதரர் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த போது பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதில்  “ தனது குடும்பம் எப்படி உலகின் ஆபத்தான மனிதனை உருவாக்கியுள்ளது ” என தெரிவித்திருந்தார். அவரின் இந்த அறிக்கை உலகம் முழுவதும்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், தன்னைக் கடைசி வரை மறக்காமல் இருக்க வேண்டும் எனவும்  டிரம்புக்கு கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web