டிடிஎப் வாசன் ரகசிய திருமணம்....!
டிடிஎஃப் வாசனுக்கு திருமணம் ஆக இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியவில் சர்ச்சை நாயகனாக யூடியூபர் டிடிஎப் வாசன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தன்னுடைய பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் வழியில் ஏழைகளுக்கு உணவு மற்றும் சாப்பாடு உதவிகள் செய்வது என வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவர் சீக்கிரமாகவே 2K கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார்.
இருந்தாலும் வண்டியில் அதிவேகமாகச் சென்று பிறரை பயமுறுத்துவதும், சாலை விதிகளை மீறுதல் என பல வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். இவரிடமிருந்து லைசன்ஸ் பறிக்கப்பட்டது. அதன் பின் டிடிஎஃப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். அதற்குப் பிறகு இந்த படத்தை குறித்து எந்த ஒரு தகவலுமே வெளியாகவில்லை. பின் சில மாதங்களுக்கு முன் மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர், இந்தப் படத்தில் இருந்து டிடிஎப் வாசனை நீக்கி விட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

அதன் பின் இது குறித்து மனவேதனையில் டிடிஎஃப் வாசன் வீடியோ வெளியிட்டு இருந்தார். பின் இருவரும் மாற்றி மாற்றி புகார் அளித்து இருந்தனர். தற்போது இவர் ஐபிஎல் என்ற படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் டிடிஎஃப் வாசன் கொடுத்திருக்கும் ஷாக்கிங் அப்டேட் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இவர் வெளியிட்ட வீடியோவில் டிடிஎப் வாசன், எனக்கு நாளை திருமணம் நடைபெற இருக்கிறது.

நான் ராஜஸ்தானில் ரைடு சென்று கொண்டிருக்கும்போது என்னுடைய காதலி அவசரமாக போன் பண்ணி வர சொன்னார். நான் என்னுடைய சொந்த மாமா பொண்ணை தான் 5 வருடங்களாக காதலித்து வருகிறேன். ஃபேமிலிக்கு இந்த விஷயம் தெரிந்ததும் வீட்டை விட்டு எனக்காக ஓடி வந்து விட்டாள். அவரை நான் செல்லமாக ஸ்வீட்டு என தான் அழைப்பேன். நான் அவரிடம் ஏற்கனவே 3 மாதம் டைம் கேட்டிருந்தேன். மூன்று மாதத்தில் என்னுடைய படம் ரிலீஸ் ஆக இருப்பதால் அதற்கு பின் ஒரு ஹீரோவாக கெத்தாக வந்து பொண்ணை கேட்கலாம் என இருந்தேன்
உடனே வாசன், நீ கல்யாணம் பண்ணுவதில் உறுதியாக இருக்கிறாயா? எனக் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண், கன்ஃபார்ம். நீங்க பயப்படுறீங்களா எனக் கேட்கிறார். அதற்கு வாசன், பயம் எல்லாம் எனக்கு என்னைக்குமே கிடையாது. ஃபேமிலி சம்மதத்துடன் கல்யாணம் பண்ண வேண்டும் என்பது தான் ஆசை. அதனால் தான் யோசிக்கிறேன் எனக் கூறியுள்ளார். பின் டிடிஎப் வாசனுக்கு ஒருவழியாக கேரளா கோயிலில் திருமணம் நடந்து விட்டது. ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
