திருப்பதில் கூட்டநெரிசலில் 6 பேர் பலியாகி இருப்பது வேதனையளிக்கிறது... டிடிவி தினகரன்!
திருப்பதி திருத்தலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்க இலவச டோக்கன் வாங்கவும் வைகுண்ட வாசல் வழியாகச் செல்ல புதன்கிழமை இரவு 9 மணிக்கு பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயற்சி செய்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சுத் திணறலால் பலர் மயக்கமடைந்தனர். சுமார் 25க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ருயா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 9, 2025
துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின்…
இவர்களில் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உட்பட 5 பெண்கள் அடங்குவர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!