அசத்தல்... இரட்டைச் சகோதரிகள் இருவரும் 484 ... 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆச்சர்யம்!

 
இரட்டை சகோதரிகள்
 

 இன்று தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதத்தை பொறுத்தவரைஅரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள சூளைப் பகுதியில் இருக்கும் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகமணி. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவருக்கு  எம்.ஹரிணி மற்றும் எம்.சபரி ஸ்ரீ என இரட்டை  மகள்கள். இந்த இரட்டை சகோதரிகள்  அவிநாசியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தனர்.

தேர்வு

இன்று வெளியான 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவில் இரட்டையர் சகோதரிகள் இருவரும் 484 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இது குறித்து அவர்கள்   ஆசிரியர்கள் வழிகாட்டுதல்,  அம்மாவின் அரவணைப்பு மற்றும் ஊக்கத்துடன் நன்றாக படித்து நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இருவரும் ஒரே மாதிரியாக 484 மதிப்பெண்களை பெற்றுள்ளோம்.  மேற்படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று எங்கள் அம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.  
சிறுவயதிலேயே தந்தையை இழந்து பனியன் கம்பெனியில் டெய்லராக பணிபுரிந்து  வரும் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள் இந்த இரட்டை சகோதரிகள். இருவரும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில்   ஒரே மதிப்பெண் பெற்று தாய்க்கு பெருமை சேர்த்துள்ளனர். இச்சம்பவம்  அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web