மாணவன் கொலை வழக்கில் திருப்பம்... 2 சிறுவர்கள் கடத்தலுக்கு உதவி!

சிவகங்கை லாக்கப் கொலை வழக்கு தமிழகத்தை அதிர செய்த சுவடு கூட இன்னும் மறையவில்லை. அடுத்தடுத்த சோகமாக திருப்பூரில் 500 பவுன் வரதட்சணைக்காக இளம்பெண்ணின் உயிரைக் காவு கொடுத்திருக்கிறோம். சமூகம் எதை நோக்கி செல்கிறது என்கிற பதைபதை அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக கிருஷ்ணகிரியில், பள்ளி மாணவன் ஒருவ்ன் கடத்திக் கொலைச் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களாக தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஓசூர் அஞ்செட்டி அருகே மாவநட்டி கிராமத்தில் 13 வயதுடைய 8-ம் வகுப்பு பள்ளி மாணவன் ரோகித் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், மாணவனைக் கடத்துவதற்கு 15 வயதுடைய 2 சிறுவர்கள் உதவி செய்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
கடந்த ஜூலை 2ம் தேதி புதன்கிழமை மாலை ரோஹித் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள குந்துகோட்டை அருகே முட்புதரில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த கொடூர சம்பவத்தில் கடத்தலுக்கு உதவி புரிந்ததாக கூறப்படும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களிடம் அஞ்செட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அதன்படி மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரும், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு இளைஞரும் இந்த கடத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சிறுவனின் உடலை வைத்து உறவினர்களும், கிராம மக்களும் காவல்துறையின் செயலற்ற தன்மையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!