கள அரசியலில் குதித்த தவெக தலைவர் விஜய்.. முதல் இடமே வெறித்தனம்.. எங்கு ஆரம்பிக்கிறார் தெரியுமா?

 
விஜய் தவெக மாநாடு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தின் கீழ் வரும் பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மேலும், பரந்தூரில் சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட ஏற்பாடு நடந்து வருகிறது. பரந்தூர், ஏகனாபுரம், அக்காமாபுரம், மாலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர்.

பரந்தூர்

இந்த இடத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டுவதை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏகனாபுரம் கிராமத்தில் உள்ளதைப் போன்ற வசதிகளை எங்களுக்கு வழங்க முடியாது என்றும், மாற்று இடம் வழங்கப்பட்டாலும், எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதைத் தவிர்த்து, வேறு பகுதிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். ஏகனாபுரம் கிராமத்தைப் போலவே, அதைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

விஜய்

இந்த சூழ்நிலையில், பரந்தூர் மக்களைச் சந்திக்க அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகத்தினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த மாநில மாநாடு மூலம் விஜய் முதன்முதலில் அரசியலில் நுழைந்தார். அதன் பிறகு, விஜய் எந்த பொது நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை. ஒரே ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மட்டுமே கலந்து கொண்டார். மேலும்,  நிறுவப்பட்டதிலிருந்து முதல் முறையாக விஜய் மக்களை சந்திக்கிறார். ஜனவரி 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் பரந்தூரில் போராட்டம் நடத்தும் மக்களை சந்திக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர். இதன் மூலம், விஜய் முதல் முறையாக கள அரசியலுக்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web