திருப்பூரில் 2 வங்கதேச இளைஞர்கள் கைது... ஆதார், பான்கார்டுகள் பறிமுதல்!

 
 முகமது அர்ஜு - போலாஸ் பர்மன்

அன்னூர் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளி தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வங்கதேசத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் குறித்த உரிய ஆவணங்களை தொழிற்சாலை நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள அகஸ்டன் நிட் என்ற தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது அர்ஜு (26), போலாஸ் பர்மன் (28) ஆகிய 2 பேர் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரையும் அன்னூர் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்து விசாரித்தனர்.

இதில், வங்கதேசத்தை சேர்ந்த முகமது அர்ஜு, 2012ல், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, திருப்பூரில் தையல்காரராக பணியாற்றி வந்ததும், ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்று, அன்னூர் பகுதியில், 2023ம் ஆண்டு முதல் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. , பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web