ஒரே பட ஷூட்டிங்கில் ரஜினியும், அமிதாப் பச்சனும்... செம ட்ரீட்!

 
அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்

ஒரே படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், பல வருடங்களுக்குப் பிறகு அமிதாப் பச்சனும், ரஜினியும் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமான வேட்டையன் படத்தை டி.எஸ்.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் அக்டோபரில் வெளியாகும் நிலையில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ராணா டகுபதி மற்றும் பல மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும், 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சினிமாவின் இருபெரும் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த் இணையும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த்-அமிதாப் பச்சன் வேட்டையன் படப்பிடிப்பில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பிரபலமாகி வருகிறது. 'வேட்டையன்' உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு  ஆக்‌ஷன் என்டர்டெய்னர் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web