கடலில் மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்கள் மாயம்!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

 

தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் மீனவர்கள் இருவர் மீன் பிடிக்க சென்று மாயமாகியுள்ளனர்.  ஜேசுராஜ், புரோசஸ் இவர்களுக்கு சொந்தமான  நாட்டுப்படகில் தூத்துக்குடி கரிக்கலம் காலனியில் வசித்து வரும்  ராஜேந்திரன்,   இனிகோ நகரை சேர்ந்த சேவியர் மகன் பால்பின் இருவரும்  ஜனவரி 1ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றார்கள். அதன் பிறகு இருவருமே  கரைக்கு திரும்பவில்லை.

தூத்துக்குடி
இதனால் அதிர்ச்சி அடைந்த  உறவினர்கள் மீன்வளத் துறையில் புகார் தெரிவித்துள்ளனர். இதன் பேரில்  தூத்துக்குடி கடல் பகுதியில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து  கடலோர பாதுகாப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தேவேந்திரர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பால்பினின் மனைவி , ‘‘எனது கணவரும் அவரது நண்பரும்  கடலுக்கு மீன்பிடிக்க சென்று இன்னும் கரைக்கு திரும்பவில்லை. இது குறித்து  போலீசில் தகவல் தெரிவித்தும், அவர்கள் உரிய வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். 

மீனவர்
இந்நிலையில் எனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி எங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன.  இதனால் எனது கணவரை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளார்.  இதற்கு பதில் அளித்த ஆட்சியர் இளம்பகவத், ‘‘போலீசார் பொதுமக்களின் புகார்கள் மீது காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார்தாரர்கள் தெரிவிக்கும் சந்தேக நபர்களிடம் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web