முன்னாள் ராணுவ வீரர் உட்பட 2 பேர் தற்கொலை!
கோவில்பட்டி அருகே வெவ்வெறு சம்பவங்களில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேலிங்கம் பட்டி புதுகாலனி அண்ணாநகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சோலை ராஜ் (50). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஓய்வு பெற்று தற்போது வீட்டில் இருந்து வந்தாராம். இவர் கடந்த மூன்று மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு படுக்கை அறையில் உறங்கச் சென்றார். நேற்று காலை அறையில் இருந்து வெளியே வராததை அடுத்து, கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததாம். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: கயத்தாறு அருகே தெற்கு கோனார் கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டியன் மகன் பூல்பாண்டியன்(42). கடந்த பத்து ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்த இவர் கடந்த சில நாள்களாக நல்ல நிலையில் இருந்து வந்தாராம். இந்நிலையில் தோட்டத்திற்கு சென்ற அவர் அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டிற்கு வந்தாராம்.

உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்களாம். இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
