கட்டிடம் கட்டும் பணியில் கட்டுமானம் இடிந்து இருவர் பலி!

 
கட்டுமானம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், கருவலூர்  உப்பிலிபாளையம் பகுதியில் வசித்து வருபவர்  சண்முகம். இவருக்கு சொந்தமான இடத்தில் கோழிபண்னை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம் போல, கட்டடத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

ஆம்புலன்ஸ்


இன்று செப்டம்பர் 20ம் தேதி சனிக்கிழமை மாலை, கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 10 அடிக்கும் மேல் அமைக்கப்பட்ட சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த, திண்டுக்கல் கொடை ரோடு பகுதியில் வசித்து வருபவர்  துரைசாமி மகன் ரமேஷ்,  அவிநாசி அருகே சுண்டக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி இருவரும்  உயிரிழந்தனர்.

போலீஸ்


இவர்களுடன் படுகாயமடைந்த கருவலூர் மேற்கு வீதியில் வசித்து வருபவர்  சுந்தர்ராஜ் மற்றும்   கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த முத்தாள் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?