அடுத்தடுத்து 2 திருமணம்.. பலே இளைஞரின் பகீர் செயல்.. கேள்விக்குறியான பெண்களின் வாழ்க்கை!

 
 வினோத் குமார்

பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம், அக்சரா கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் தந்தியின் மகன் வினோத் குமார் (19). இவருக்கும், லக்ஷ்மிபூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட நவ்காதி கிராமத்தை சேர்ந்த ப்ரீத்தி குமாரிக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது, இருப்பினும் ப்ரீத்தி குமாரி வினோத்தை காதலித்து வந்தார். ப்ரீத்தியின் முந்தைய திருமணம் அல்லது குடும்பம் பற்றி அவர் கண்டுக்கொள்ளவில்லை.

திருமணம்

இந்நிலையில், வினோத் குமார் ப்ரீத்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 22ம் தேதி ப்ரீத்தியின் வீட்டிற்கு சென்ற வினோத் குமார், துரதிஷ்டவசமாக கிராம மக்களிடம் சிக்கினார்.அதன்பிறகு, கிராம மக்கள் இருவரையும் அங்குள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன்பிறகு, வினோத்குமார் ப்ரீத்தியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார்.

ஆனால் எதிர்பாராத திருப்பத்தில் வினோத்குமாருக்கு ஏற்கனவே வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. டிஜேவாக பணிபுரியும் வினோத் குமார், கிரிஜா குமாரி என்ற பெண்ணின் பாடல் பரிந்துரைகளை ஒளிபரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வினோத்குமாரை கிரிஜா குமாரி காதலித்து வந்தார். ஒருபுறம் ப்ரீத்தி குமாரியை திருமணம் செய்த நிலையில், மறுபுறம் கிரிஜா குமாரியுடனும் வினோத்குமார் தொடர்பில் இருந்தார். இந்நிலையில், கிரிஜாகுமாரி வீட்டிற்கு ரகசியமாக சென்ற வினோத்குமாரை, ஊர் மக்கள் பிடித்து, ஏற்கனவே நடந்தது போல், கோவிலில் வைத்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். இந்த இரண்டு திருமணங்களும் 20 நாட்களுக்குள் நடந்தன.

இந்நிலையில், வினோத் குமாரின் தில்லாலங்கடி வேலை குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த பிரித்திகுமாரி, மலாய்பூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, பிரித்திகுமாரியுடன் வினோத்குமார் வாழ்வதற்கு கிரிஜா குமாரி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து போலீசார் அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். காவல் துறை அதிகாரி மகேஷ்குமார் கூறுகையில், "இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் வரவில்லை. புகார் இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்," என்றார். பீகாரில் 19 வயது இளைஞர் ஒருவர் 20 நாட்களில் இருமுறை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web