திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் - லாரி மோதி 7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலி!

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு படாளத்தில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வந்து கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 7 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் கூறியதாவது, வினோத் (33), அவரது குடும்பத்தினர் புவனா (30), பார்வதி (70), சச்சின் (7), சிப்பிகா (3), சாந்தி (52), ரமணி (50) ஆகியோர் விழுப்புரம் மேல்மருவத்தூர் கோயிலில் இருந்து வீடு திரும்பி சென்றுக் கொண்டிருந்தனர். படலம் அருகே நள்ளிரவு 1.30 மணியளவில் அவர்களின் கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது விபத்து நடந்தது.
காரை ஓட்டி வந்த வினோத், நெடுஞ்சாலையில் சென்ற டேங்கர் லாரியை முந்திச் செல்ல முயன்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது விசாரணையில் தெரியவந்தது.
இதில், வினோத்தின் மகன் ஏழு வயது மகன் சச்சின் மற்றும் 70 வயது பாட்டி பார்வதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றவர்கள் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!