சிறையில் இருந்தே எம்.பியான இருவர்.. நாடாளுமன்றத்தில் வேலை பார்ப்பது எப்படி? குழம்பும் மக்கள்!

 
ரஷித் - அம்ரித்பால் சிங்

பிரிவினைவாத குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இருவர் இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் எப்படி எம்.பி.க்களாக பதவிப் பிரமாணம் செய்து நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொறியாளர் ரஷித் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர் முறையே காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பிரிவினைவாத சக்திகளுடன் இணைந்து செயல்பட்ட குற்றச்சாட்டில் இருவரும் சிறையில் உள்ளனர்.

இவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் இருந்ததால், சிறையில் இருந்தபோதே சுயேட்சையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் வியக்கத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளனர். பொறியாளர் ரஷீத் என்ற ஷேக் அப்துல் ரஷீத், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான யுபிஏவின் கீழ் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா தொகுதியில் 2,04,142 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாட்டில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதற்காக நிதி திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு டெல்லி திகார் சிறையில் 5 ஆண்டுகளாக ரஷீத் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேர்தலுக்கு 2 வாரங்களுக்கு முன்பு ரஷித் வேட்புமனு தாக்கல் செய்தார். திகார் சிறையில் இருக்கும் ரஷீத்துக்கு ஆதரவாக அவரது 2 மகன்களும் பிரச்சாரம் செய்தனர். ரஷீத் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லாவை தோற்கடித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்து சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் ரஷீத், மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் அவரது சட்டப் போராட்டம் வேகம் பெற உதவலாம்.

சீக்கியர்களுக்கு தனி மாநிலம் கோரி காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பஞ்சாபில் உள்ள காதுர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக 1,97,120 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். லோக்சபா தேர்தல் முடிவுகளில் இவர்கள் இருவரின் வெற்றி உறுதியாகியதில் இருந்தே, பல கேள்விகள் இவர்கள் முன் வலம் வருகின்றன. இருவரும் எப்படி எம்.பி.க்களாக பதவிப் பிரமாணம் செய்து பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற கேள்விகளும் அதில் அடங்கும்.

இது தொடர்பாக, சிறைத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகார செயலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு எம்.பி.க்களுக்கும் காத்திருக்கும் சவால்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் உதவி கமிஷனர் அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளும் வருவார்கள். ஆனால் பாராளுமன்றத்திற்குள் போலீஸ் உத்தியோகத்தர்கள் அனுமதிக்கப்படாததால் பாராளுமன்றத்தின் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுவார்கள்.

அதன் பிறகு, பாதுகாப்பு நடைமுறைகளை அவர்களே கவனிப்பார்கள். பின்னர் அவர்கள் பாராளுமன்றத்தின் அனைத்து வழக்கமான நடவடிக்கைகளிலும் இவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, லோக்சபா உறுப்பினர்கள், வெளியாட்களுடன் வணிகம் தொடர்பான உரையாடல்களை மேற்கொள்வதற்கும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படவில்லை.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 

From around the web