அதிகாலையில் அதிர்ச்சி.. பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி, 2 பேர் கவலைக்கிடம்!!

சென்னை அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஹார்ஸ். இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மொபைல் கடையில் பணிபுரிந்து வரும் தனது நண்பர் அம்பத்தூர் தருணை பார்க்க சென்றிருந்தார். இருவரும் ராயப்பேட்டையில் நடைபெற்ற தசரா விழாவில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
தசரா விழா நிறைவடைந்து ஹார்ஸ் மற்றும் தருண் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நியூ ஆவடி ரோடு அருகே வேகமாக வந்துக்கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் ஹார்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தருண் படுகாயம் அடைந்தார். இவர்களுடன் மற்றொரு பைக்கில் வந்த வில்லிவாக்கம் மருந்து கடை ஊழியர் ஜெயபிரகாசும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த தனியார் கல்லூரி மாணவன் பழனிவேல் படுகாயம் அடைந்துள்ளார் .
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜெயபிரகாஷ், ஹார்ஸ் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த தருண், பழனிவேல் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர் . இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவன் உட்பட இருவர் உயிரிழந்தனர். இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!